நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்!!

வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நேற்று (19.) இவ்வாறு சுட்டுக் கொலை செய்துள்ளார்.

வைத்தியசாலையின் பிரேத அறையருகில் நின்ற நாய் மீதே பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னிடம் இருந்த வாயு துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதனால் காயமடைந்த நாய் இரத்தம் சிந்த இழுபட்டு சென்று வேலி ஓரமாக மரணித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நாய் காப்பகம் ஒன்றை நடத்தி வருபவர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் இன்று (20) முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்த விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்ப்படும் என பணிப்பாளர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

Related Posts