ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை, குழுக்கள் குழுக்களாக மியான்மாரில் உள்ள சைபர் முகாம்களுக்கு அனுப்புவது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய அதிரடிப்படை எச்சரித்துள்ளது.
அண்மைக்காலமாக அதிகளவான இலங்கையர்கள் குறித்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, அதிக கணினி அறிவு உள்ளவர்களை அதிக சம்பளம் வழங்குவதாகவும், வேறு நாடுகளில் வேலைக்கு அனுப்புவதாகவும் கூறி ஏமாற்றி வருகின்றமை தெரியவந்துள்ளது.
சிலரை துபாயில் நேர்காணல் உள்ளதாக கூறி ஏமாற்றி , மியான்மாருக்கு அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, வெளிநாடுகளுக்குச் செல்லும் பட்சத்தில் அனைவரும் சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு தேசிய அதிரடிப்படை கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே, சந்தேகத்திற்கிடமான சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112102570, 076 844 7700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது nahttfsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்குமாறு தேசிய அதிரடிப்படை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.