யாழில் 9 ½ மணிநேர மின் வெட்டு

powercutவீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் 13.02.2012 புதன்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி, கற்கோவளம், புனிதநகர், நெல்லண்டைப் பிரதேசங்கள் ஆகிய இடங்களில் மின்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

14.02.2013 வியாழக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் பருத்தித்துறை சிவன் கோவிலுக்கும் சிவப்பிரகாசம் பாடசாலைக்கும் இடைப்பட்ட பிரதேசங்கள், கோண்டாவில் ஸ்டேசன் வீதியில் கே.கே.எஸ். வீதி சந்திக்கும் கோண்டாவில் உணவுக் களஞசியத்திற்கும் இடைப்பட்ட பிரதேசங்கள், அல்வாய், திக்கம் பிரதேசங்கள், சாமியன் அரசடி, சம்பந்தர்கடைப் பிரதேசங்கள், முத்திரைச் சந்திப் பிரதேசம், வைமன் பிரதேசம், நல்லூர் கோவில் வீதி ஆகிய இடங்களிலும்

15.02.2013 வெள்ளிக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் வட்டு இந்துக் கல்லூரிப் பிரதேசம், சங்கரத்தைப் பிரதேசம், குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி ஆகிய இடங்களிலும்

16.02.2013 சனிக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் ஆனைக்கோட்டை, காக்கைதீவு, அட்டகிரி, சாவற்கட்டு, வராகி அம்மன் கோவிலடி, ஆனைக்கோட்டை குளப்பிட்டி வீதி, மந்திகைப் பிரதேசம், புலோலி, சாரையடி, ஓராம்கட்டை, தம்பசிட்டி, பருத்தித்துறைப் பிரதேசம், அல்வாய்ப் பிரதேசம், நெல்லியடிப் பிரதேசம், கரவெட்டிப் பிரதேசம், கரணவாய்ப் பிரதேசம், குங்சர்கடைப் பிரதேசம், கற்கோவளம், புனிதநகர், நெல்லண்டைப் பிரதேசங்கள் ஆகிய இடங்களிலும்

17.02.2013 ஞாயிற்றுக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி ஆகிய இடங்களிலும்

18.02.2013 திங்கட்க்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் நெல்லண்டைப் பிரதேசத்திலும் 19.02.2013 செவ்வாய்க்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் வல்லிபுரம், குடத்தனை, அம்பன் ஆகிய இடங்களிலும் மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related Posts