பண்ணை கடலுக்குள் பஸ் பாய்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்

bus_sea_jaffna_001பண்ணை கடலுக்குள் பஸ்ஸொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறைக்கு சென்றுக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸின் சாரதியான சுதாகரன்,நடத்துனர் சுப்பிரமணியம் பரமநாதன் (வயது 50) நாவலர் வீதி பகுதியைச் சேர்ந்த கோபாலு கணேசலிங்கம் (வயது 40) தெஹியத்த கண்டியைச் சோந்த பிரியாணி தம்மிகா (27) வேலணை சரவணை பகுதியைச் சேர்ந்த பரமலிங்கம் துவாரகா (வயளது 26) கரம்பன் ஊர்காவற்துறையைச் சேர்ந்த பிரேமானன் சந்தன (வயது 31) ஆகியோரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts