Ad Widget

எரிபொருட்களின் விலைகள் திருத்தம்!!

மாதாந்த விலைத் திருத்தத்தின் பிரகாரம் வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் விலை 6 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் புதிய விலை 371 ரூபாவாகும்.

இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை மாற்றமின்றி 311 ரூபாவாகும்.

வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை மாற்றமின்றி 283 ரூபாவாகும்.

மேலும், ரூ.183 ஆக இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை அப்படியே உள்ளது.

இதேவேளை சினோபெக் நிறுவனமும் வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371.00 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 313.00 ரூபாவாகும்.

மேலும், 280 ஆக இருந்த ஆட்டோ டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 283.00 ஆக உள்ளது.

311.00 ரூபாவாக இருந்த 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

Related Posts