வடமராட்சியில் கணவனும் மனைவியும் படுகொலை!!

வடமராட்சி, பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக காணப்படுகின்றனர்.

வேலைக்குச் செல்வதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பதில் இல்லாமை காரணமாக குறித்த வீட்டிற்கு இன்று (30) காலை சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

50 மற்றும் 51 வயதான இருண்டு பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ் பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts