Ad Widget

பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலை குறைப்பு!

உணவுப்பொதி, பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களில் எந்தவிதாமாற்றமும்ம மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விலைகுறைப்பின் பலனை பொதுமக்களுக்கு வழங்காத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த காலங்களில் முட்டை ஒன்று 60 முதல் 70 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது 28 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த நிவாரணத்தினை நுகர்வோருக்கு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டோம். எனவே முட்டை பயன்படுத்தி தாயாரிக்கப்படும் உணவுவகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டோம்.

ப்ரைட் ரைஸ் 40 ரூபாவினாலும் முட்டை ரோல்ஸ் 20 ரூபாவினாலும் முட்டை உணவுப்பொதி 40 ரூபாவினாலும் முட்டை ரொட்டி 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் இன்று முதல் குறைந்த விலையில் குறித்த வகை உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யமுடியும். விலைகுறைப்பின் பயன்பாட்டினை பொதுமக்களுக்கு வழங்காத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

Related Posts