‘யாழ் ஒளி’ உப மின் நிலையத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை திறந்துவைத்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடனேயே இந்த உப மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
3,325 மில்லியன் ரூபா செலவில் சுன்னாகம் மின்சார நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த உப மின் நிலைய நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 8 மாதங்களில் இந்த உப மின் நிலைய பணிகள் நிறைவுபெற்று இன்று முதல் 24 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி அமைச்சர்களான பவித்ரா வன்னியராச்சி, டக்ளஸ் தேவானந்தா, ராஜித சேனாரத்னா, மின்சத்தி எரிசத்தி பிரதி அமைச்சர் எச்.ஏ.பிரேம்லால், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.