ஏ9 வீதியில் நடைபெற்ற வீதிவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை ஏ9 வீதி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பரும் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.