Ad Widget

புதிய பிரதமராக ஹாிணி அமரசூாிய?

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர்.

எவ்வாறெனினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஹரினி அமரசூரிய நாட்டின் பிரதமராக பதவியேற்கலாம் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது.

ஹரிணி அமரசூரிய இலங்கையின் கல்வியாளர், அரசியல் சமூக செயற்பாட்டாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் இருக்கும் ஹரிணி அமரசூரிய, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

54 வயதுடைய இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts