ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நலன்கருதி விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நீண்ட தூர சேவைகளுக்கென மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை தனியார் பயணிகள் பேரூந்து சேவை ஊழியர்கள் வாக்களிக்கவுள்ளதால் அன்றைய தினம் மேலதிகமாக தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கென விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை வரை இந்த விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் ரயில் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை சேவையில் ஈடுபடவுள்ளது
காலை 9.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து காலை 10.37க்கு குருநாகலைச் சென்றடையும். பின்னர் குறித்த ரயில் பிற்பகல் 1.30க்கு அனுராதபுரத்தை சென்றடையும்.
மாலை 4.36க்கு காங்கேசன்துறையை அடையுமென ரயிலவே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி எதிர்வரும் 20ம் மற்றும் 22ம் திகதிகளில் பயணத்தை முன்னெடுக்கும்.
குறித்த ரயில் நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 3.17க்கு அனுராதபுரத்திலிருந்து புறப்படும். மாலை 5.57க்கு குருநாகலிலிருந்து புறப்பட்டு 7.35க்கு பொல்கஹாவெல, குருநாகல், மஹவ உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தரித்து நிற்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.