ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
நாளை செவ்வாய்க்கிழமை நயினாதீவுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளதுடன், சுன்னாகம் மின்நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி முன்னிலையில் யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டமும் அன்றையதினமே நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் டில்கோ சிற்றி ஹோட்டலிலேயே இந்த கூட்டம் நடைபெறவிருக்கின்றது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ள இவ் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கவில்லையென்பதை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் உறுதிப்படுத்தினார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் ஜெய்க்கா நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தொகுதியை 13 ஆம் திகதி ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.