யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.