ரஷ்ய மற்றும் உக்ரைன் போருக்கான வாடகைப்படையினராக செயற்பட இலங்கை இராணுவச் சிப்பாய்களை அவண்ட் கார்ட் நிறுவனமே அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ரஷ்யாவுக்கு வாடகைப்படையினராக இலங்கை இராணுவச் சிப்பாய்களை அவண்ட் கார்ட் என்றொரு நிறுவனமே அனுப்புவதாக தெரிய வந்துள்ளது.
குறித்த நிறுவனம், இலங்கையில் உள்ள அவண்ட் கார்ட் நிறுவனம் தானா என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால் ரஷ்யாவில் இருந்தபடி அதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் அனைவரும் இலங்கையின் சிங்களப் பெயர் கொண்டவர்களே.” என தெரிவித்துள்ளார்.