உக்ரேனில் நடந்து வரும் மோதல்களில் இலங்கையர்களும் பங்கேற்றுள்ள சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரேனில் ரஷ்யாவுக்காக போரிட்ட குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரஷ்யப் படைகளுடன் போரிடும் மற்ற இலங்கையர்களால் இந்த உடல்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரேனுக்காக போராடிய மூன்று இலங்கையர்களுடன் இந்த இரண்டு இறப்புகளும் சேர்ந்துள்ளன.
நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இன்னும் பலர் பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் என்பதுடன் ரஷ்ய இராணுவத்தில் சேர தீவிரமாக முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான வறுமையின் மத்தியில் மொஸ்கோவின் பணத்திற்கு ஈடாக உக்ரேனியப் படைகளின் கைகளில் மரணத்தைப் பணயம் வைக்க அவர்கள் தயாராக இருப்பதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த டிசம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஸ் ஹேவகே மற்றும் எம்.எம்.பிரியந்த மற்றும் ரொட்னி ஜெயசிங்க ஆகிய இலங்கையர்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 15 அன்று பல உக்ரேனிய வீரர்களுடன் கீவ் நகருக்கு கிழக்கே 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மிலினோவ் என்ற இடத்தில் ஹெவகே புதைக்கப்பட்டார்.
ஆனால் மற்ற இரண்டு இலங்கையர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இந்தநிலையில் உக்ரேனுக்காகப் போரிடுவதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறிய ஹத்துருசிங்க என்பவர், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பக்கம் இன்னும் இணைந்திருக்கும் ஒரே இலங்கையர் என நம்பப்படுகிறது.