இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் போராட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்று (20) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே இவ்வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதோடு விரிவுரையாளர்கள் பணியாளர்கள் உட்செல்லமுடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts