யாழில் கும்பலொன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினமான நேற்று(11) மாலை, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 06 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய கும்பல் குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்க முற்பட்டதாகவும், இதன்போது அயலவர்கள் கூடியமையினால் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான செய்தி ஒன்று சமூக ஊடகமொன்றில் வெளியாகி இருந்த நிலையில், அதனை அகற்ற கோரியே குறித்த கும்பல் தன்னை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் முறைப்பாடளித்துள்ள நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை கோப்பாய் பொரிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.