யாழ், குருநகரில் காணாமற்போனதாக கூறப்பட்ட 17 வயது சிறுவன் ஞாயிறு இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவரது சகோதரனினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சிறுவனிடம் கேட்ட போது, தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை தானே வீட்டைவிட்டு சென்று பெரியகோவில் பகுதியில் இருந்ததாகவும் தன்னிடம் இருந்த பணத்தை வைத்து உணவினை வாங்கிச் சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
ஞாயிறு இரவு குறித்த சிறுவன் பெரிய கோயில் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த போது அவருடைய சகோதரரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவரை யாரும் கடத்திச் செல்லவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து கடந்த 29 ஆம் திகதி இரவு சென்றவரை காணவில்லை என்றும் தனது சகோதரனை தேடிபார்த்ததன் பின்னரே அவரது சகோதரர் கடந்த 3ஆம் திகதி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.