கொக்குதொடுவாய் மனித புதைகுழி: 37 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27) முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ”நேற்றைய தினத்துடன் சேர்த்து 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது” இதுவரை 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது.

இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Posts