யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் யாழ். வணிகர் கழத்தால் வாழ்வாதார கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
யாழ். வணிகர் கழகத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 9 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை யாழ் வணிகர் கழகத்தால் 150 பேருக்கு வாழ்வாதராத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைஎ எடுக்கப்பட்டு வருதாக யாழ வணிகர் கழத்தின் தலைவர் தெரிவித்தார்