Ad Widget

அதிவிசேட சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

வடமாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

வடமாகாண கல்வி பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தனர்.

வடமாகாணத்தில் உள்ள 12 வலங்களைச் சேர்ந்த 24 மாணவர்களுக்கு இந்த பரிசில்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ரீதியில் முதலிடம்பெற்ற மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகளும் தேசிய ரீதியில் முன்னிலை வகித்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செல்வராசா, யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகெஸ்வரி பற்குணராஜா, மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

GCE_AL_prize

GCE_AL_prize1

Related Posts