இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை பக்கவாதம் தொடர்பான சங்கத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான ஹர்ஷ குணசேகர விடுத்துள்ளார்.
ஒருவருக்கு ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்டால், அவர்களில் 25 வீதமானவர்களுக்கு மீண்டும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நரம்பியல் ஹர்ஷ குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நரம்பியல் நிபுணர் ஹர்ஷ குணசேகர இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் சுமார் 200,000 பக்கவாத நோயாளிகள் இருப்பதாகவும், 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த இதற்கான பிரிவுகள் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முகத்தின் ஒரு பக்கம் இழுப்பது, வார்த்தைகளில் தடுமாற்றம், கை அல்லது காலில் உணர்வு இழப்பது போன்ற உணர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
மேலும், இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதிக மருந்துகளை உட்கொள்ளாமல் மருந்துவர்களிடம் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.