சட்டவிரோத மதுபானசாலைகள் : வடமாகாண ஆளுநரின் திடீர் முடிவு?

யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டவிரோத மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீங்கள் இவ்வாறு சட்ட விரோத மதுபான சாலைகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானத்தினை இழக்க செய்கின்றீர்கள்.

அத்தோடு அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்த கூட்டத்திற்கு கூட திணைக்களத்திற்கு பொறுப்பானவர் சமூகமளிப்பதில்லை.

உதவி அத்தியட்சகர் தான் ஒவ்வொரு முறையும் இந்த கூட்டத்திற்கு வருகின்றார். எனவே சட்ட விரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்த முறை நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபான சாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விவரத்துடன் வரவேண்டும்” என வடமாகாண ஆளுநர் மதுவரித்திணைக்கள உத்தியோகத்தருக்கு பணிப்புரை விடுத்தார்.

Related Posts