யாழில். மாணவியை வீடியோ எடுத்த சந்தேகநபர் தலைமறைவு!

யாழில் மாணவி ஒருவர் தனது வீட்டில் குளித்துக்கொண்டிருக்கும் போது அதனை மறைந்திருந்து கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்தார் என சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று ஜன்னல் வழியாக கையடக்க தொலைபேசி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி உடனே சத்தமிட்டுள்ளதுடன், இது குறித்து தனது பெற்றோரிடமும் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அயல் வீட்டு இளைஞன் மீது மாணவியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடளிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இளைஞனிடம் பொலிஸார் வாக்குமூலம் பெறச் சென்றபோது, இளைஞன் தலைமறைவான விடயம் தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Posts