போலி விசா மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற நபர் கைது!!

போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கட்டார் விமான சேவை ஊடாக டோகா நோக்கி செல்ல முற்பட்ட போது விமான நிலைய அதிகாரிகள் அவரது விசா பரிசீலிக்கப்பட்ட போது விசா போலியானது என்பதனை கண்டறிந்து அவரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts