பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இசை நிகழ்ச்சி

A_E_Manokaranவன்னியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சென்.ஜோன்ஸ் கல்லூரியில் கல்விகற்கும் 450 மாணவர்களுக்கு கல்வி வசதிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக, A.E.மனோகரன் இசைக் குழுவினரால் இசை நிகழ்ச்சியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கட்டணங்கள் எதுவுமின்றி இலவசமாக சென்.ஜோன்ஸ் கல்லூரியில் கல்விகற்று வரும் மேற்படி மாணவர்களில் 150பேர் விடுதியிலும் மிகுதிப்பேர் வீடுகளிலும் இருந்து கல்வி கற்று வருகின்றனர்.

இவர்களுக்கு கல்வி வசதி, உணவு வசதிகளை இது வரை காலமும் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் கவனித்து வந்தது.

இந்நிலையில் மேற்படி மாணவர்களின் மேலதிக தேவைகளுக்காக மேற்படி இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் என்.ஞானப்பொன்ராஜா தெரிவித்தார்.

Related Posts