மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் கைது!!

நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை அதிரடியாக முன்னெடுக்கப்பட்டது.

நாவற்குழி, ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்கிற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் வீட்டில் கணவனை காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.

குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய பொலிஸார் கணவரை நோக்கி தீவிர தேடுதலை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் “தான் மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது” என சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related Posts