மகளைக் கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய தந்தை!

மாணவியைக் கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தருவதில்லை என அவரது ஆசிரியர் கண்டித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து அம்மாணவி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் பாடைசாலைக்கு வந்த தந்தையும் அவரது நண்பரும் பாடசாலை வாசலில் வைத்து குறித்த ஆசிரியர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts