முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts