தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் : மூன்று மாத குழந்தை உயிரிழப்பு!

வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற மூன்று மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று யாழ். வைத்தியசாலையின் பிரேத அறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நுரையீரலில் தாய் பால் சிக்கியமையினால் குழந்தை உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts