மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அடையாள உண்ணா விரதப்போராட்டம்

tellippalaiவலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பாடாத பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை நடத்த வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த அடையாள உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறவுள்ளது என வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் அரசியலுக்கு அப்பால் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Posts