சித்திரவதை தொடர்பாக அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்!!

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 076 545 3454 என்ற Whats App தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறித்த சித்திரவதைகள் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளையும் குறித்த Whats App தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகவும் சித்திரவதை முறைப்பாடுகள் பற்றிய தகவல்களையும் தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு சேவையானது 24 மணி நேரமும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts