முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள், குறித்த அகழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் உரியவாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.