வெளிநாடு செல்லும் தேவைகளுக்காக ஒரே நாளில் உயர்தரப் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயணம் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றில் உயர்கல்வியைத் தொடர்தல் போன்ற காரணிகளுக்காக பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒரே நாளில் இவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
பெறுபேறு வெளியிடப்பட்ட தினத்திற்கு மறுநாள் முதல் இந்த ஒருநாள் சேவை அமுல்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை மீளாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் 22ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை மீளாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுபேறுகளுடன் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 5ம் திகதி தேசிய பத்திரிகைகளில் வெளியாகும் மாதிரி விண்ணப்பபடிவத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உயர்தரப் பரீட்சை தொடர்பான பிரச்சினைகளுக்கு 0112784208, 0113188350 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.