கருங்கடலில் ரஷ்ய டேங்கர் மீது கிவ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய மற்றும் உக்ரைனிய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
ஒரே இரவில் தீவிர வான்வழி தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் உக்ரைனில் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து, சீனா,இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட 40 நாடுகளின் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சனிக்கிழமை மாலை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை கிழக்கு நகரமான Kupiansk இல் இடம்பெற்ற இரத்த மையத்தின் மீதான தாக்குதலுக்கு உக்ரைனிய அதிகாரிகள் ரஷ்யாவை குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே நேரத்தில் மாஸ்கோவில் கடமையிலுள்ள அதிகாரிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Donetsk பகுதியில் ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினார்கள்.
கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள குபியன்ஸ்க் மீதான தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்துள்ளார்.