ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தந்திரோபாய அணுவாயுதங்களைப்(tactical nuclear) நிச்சயம் பயன்படுத்துவார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
மேலும் கடந்த வாரம், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தனது நாட்டு தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்கத் தொடங்கியுள்ளதாகக் பைடன் குற்றம் சுமாட்டியுள்ளார்.
அவற்றில் சில 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட மூன்று மடங்கு சக்திவாய்ந்தவை என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு முதன்முறையாக ரஷ்யாவிற்கு வெளியே இடம்பெறும் போர்க்களத்தில் ரஷ்ய பயன்படுத்தும் முதல் அணு ஆயுதமாக இது காணப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு பதில் மூலோபாய திட்டங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அணுவாயுதத்தை பயன்படுத்த தயாராகி வருவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
எனினும் பெலாரஸ் உடனான ரஷ்யாவின் கொள்கையானது அணு ஆயுத தாக்குதலுக்கு கட்டாயம் வழிவகுக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது .