யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கை இழிவானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்த சம உரிமைகளுக்கான அழைப்பாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது கோழைத்தனமானதும், இழிவானதுமான செயலாகும். தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.