உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு மறைமுகமாக சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக இதுவரை சீனா ஆயுதங்களை வழங்கவில்லை, இனியும் வழங்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவொன்றிின் மூலம் அமெரிக்க வெளியுறவுத்துறை இதனை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா பிரச்சினை மற்றும் தைவான் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சமீபத்தில் இரு நாடுகளை சேர்ந்த உயர் அதிகாரிகளும் சந்தித்து கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தே அமெரிக்க வெளியுறவுத்துறை ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது.