சர்வதேச அளவில் காணப்படும் அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் சீனா தனது அணு ஆயுதங்களைக் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பல நாடுகளும் சீனாவுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இந்த விடயம் உலக ஆராய்ச்சியாளர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனினும் உலகளவில் பார்க்கும் போது அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக குறித்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டான் ஸ்மித் கூறுகையில்,
“சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நல்ல ஒரு விடயம் ஆகும்.
தற்போது சர்வதேச அளவில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் காணப்படுகின்றன.
2022ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 12,710 ஆக காணப்பட்ட அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 2023இல் 12,512 ஆக குறைந்துள்ளது.