கருங்கடலில் உள்ள முக்கிய எரிவாயு குழாய்களுக்கு அருகே ரஷ்ய கப்பலை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்யா கூறியுள்ளது.
கருங்கடலில் ஆறு அதிவேக ட்ரோன் படகுகள் மூலம் ரஷ்ய கடற்படை கப்பலை தாக்க உக்ரைன் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியா தீபகற்பத்தில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தலைமையகமான செவஸ்டோபோலில் இருந்து தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் தோல்வியடைந்ததையடுத்து, ப்ரியாசோவி கப்பல் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்துவருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தாக்குதலின் போது, அமெரிக்காவின் RQ-4 Global Hawk ஆளில்லா கண்காணிப்பு விமானம் கருங்கடலின் மத்திய பகுதியில் இருந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.