உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜர்

daklasயாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் (ஈ.பி.டி.பி) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணைக்காக, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா இன்று தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார்.

Related Posts