மாதான திட்டம் குறித்து விவாதிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய போரினால் உலகின் பல நாடுகள் பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய உக்ரைன்-ரஷ்ய போரை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பது குறித்து ஆப்பிரிக்க தலைவர்கள் அண்மைக்காலமாக பேசி ஆலோசனை நடத்தி வருவதாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ராமபோசா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவரும் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களின் குழுவுடன் ஒப்புக் கொண்டதாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி தெரிய வந்துள்ளது.
மேலும் தனது ரஷ்ய மற்றும் உக்ரைனிய சகாக்களுடன் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, வார இறுதியில் தொலைபேசியில் பேசியதாக அவரது அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி பேச்சுவார்த்தை பணியில் ராமபோசாவுடன் ஜாம்பியா, செனகல், காங்கோ, உகண்டா மற்றும் எகிப்து நாடுகளின் தலைவர்கள் சேர திட்டமிட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.