Ad Widget

உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம்! இரு நாட்டு படைகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை!!

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனில் போரின் முன்வரிசையில் ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர் கூலிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்டானிட்சியாவில் ரஷ்ய இராணுவ வீரர்களுக்கும், வாக்னர் குழுவின் கூலிப்படையினருக்கும் இடையே இவ்வாறு சண்டை வெடித்துள்ளது.

மேலும் இந்த மோதலின் காரணமாக இரு நாட்டு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவிற்காக சண்டையிடும் வாக்னர் கூலிப்படையும், ரஷ்ய இராணுவ படையும் தங்கள் சொந்த தந்திரோபாய தவறான கணக்கீடுகள் மற்றும் இழப்புகளுக்கான பொறுப்பை ஒருவருக்கொருவர் மாற்ற முயற்சிக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts