தாக்குதல் சூத்திரதாரிகளின் புகைப்படங்களை அடையாளம் காட்ட வைத்தியர் மறுப்பு:
காது, மூக்கு, தொண்டை வைத்திய வைத்திய நிபுணரின் தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிலரின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்ட நிலையில் வைத்தியர் அடையாளம் காண்பிக்க தவறுகின்றதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்தியர் திருமாறன் தாக்கப்பட்டமை குறித்து மேலதிகமாக எவரேனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்களா என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். தலைமைப்பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமராராய்ச்சி கொழும்பிற்கு சென்று சில சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வைத்தியரிடம் காண்பிக்கப்பட்ட வேளையில், வைத்தியர் சரியான பதில் கூற மறுத்து விட்டதாகவும், சம்பவத்தில் சில தினங்களில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் மீதான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றதாகவும், விரைவில் மற்றைய இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்வுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சிறை தண்டனை அனுபவித்து வெளியேறுவோரை கண்காணிக்க பொலிஸ் குழு
சமீக காலங்களில் சிறைச்சாலைகளில் தண்டனை பெற்று வெளியேறுபவர்கள் சிலர் ஊர்காவற்துறை மற்றும் யாழின் சில பகுதிகளில் முகமுடி அணிந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் சிலரைக் கைதுசெய்த வேளையில் அவர்கள் சிறையில் இருந்து வெளியேறிய கைதிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் இவ்வாறு சிறையில் இருந்து வெளியேறியவர்களை கண்காணிப்பதற்கு விண்ஷட குழு நியமிக்கப்பட்டு, பகல் மற்றும் இரணவு வேளைகளில் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
யாழ்.குடாநாட்டில் சென்ற வாரம் இடம் பெற்ற குற்றச் செயல்கள்
- யாழ்.நல்லூர் வீதியிலுள்ள வீடு ஒன்றில் 2,18,000 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
- யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக சந்தையின் போது 2,80,000 பெறுமதியான மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
- வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ் ஒன்றில் பயணித்த பெண் பயணியிடமிருந்து 9 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- நான்கு பேர் அடங்கிய குழவினர் ஜயனார் கோவில் அருகிலுள்ள வீடு ஒன்றில் புகுந்து 1,80,000 ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.
- கொக்குவில் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர் குழு வைத்தியர் ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த பின்பு அவரிடமிருந்த தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.
- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் கடை உடைத்து 22,000 ரூபா பெறுமதியான பிஸ்கட்டுக்கள், பால் மா பக்கற்டுக்கள் திருடப்பட்டுள்ளது.
யாழில். சிறுகுற்றம் புரிந்த 90 பேர் கைது: பிரதி பொலிஸ் மா அதிபர்
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும், சட்ட விரோத மதுபான விற்பனை 4 பேரும், கஞ்சா விற்பனை செய்த 17 பேரும், மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 11 பேரும், பொது இடங்களில் மது அருந்திய 14 பேரும், சட்ட விரோதமான முறையில் வீட்டி ஆமை வைத்திருந்த 10 பேர், சுற்றுச் சூழல் மாசடையும் விதத்தில் குப்பை கூழங்களை போட்டவர்கள் 10 பேரும் உட்பட 15 வயது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த 2 பேரும் உட்பட 90 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.