உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்;ற நிலையில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவராவது கைது செய்யப்பட்டள்ளார்களா என கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் அல்வாய், மாலுசந்தி பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் உதயன் பத்திரிகை விநயோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் குறித்து நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நெல்லியடி பொலிஸாரினால் மேற்கொள்ப்பட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலத்தின் பிரகாரம் மேலதிகமான ஆதாரங்கள் எவுதும் கிடைக்கவில்லை என்றும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.