கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி: நாவந்துறையில் சம்பவம்

help-meயாழ்ப்பாணம் நாவந்துறைக் கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

மயில்வாகனம் டிலக்ஷன் (22 வயது) என்ற இளைஞனே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் குழுவொன்று படகொன்றில் கடலுக்கு குளிக்கச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts