ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்ட சென்றமைக்கு உக்ரைன் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.
போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு புடின் நேற்று இரவு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த புடின், அங்கிருந்த கலை பாடசாலை, குழந்தைகள் மையம் மற்றும் Nevsky microdistrictயில் வசிப்பவர்களையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் “குற்றவாளி எப்போதும் குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்” என்று உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறியுள்ளார்.
டுவிட்டர் பதிவின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ரஷ்யா அதன் எல்லைகளை தாண்டியதால், நாகரீக உலகம் “போர் இயக்குனரை” (விளாடிமிர் புடினை) கைது செய்வதாக அறிவிக்கும் போது, ஆயிரக்கணக்கான மரியுபோல் குடும்பங்களை கொலை செய்த கொலைகாரன் நகரின் இடிபாடுகளையும் கல்லறைகளையும் ரசிக்க வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் மாஸ்கோ சுற்றுப்பயணம் வரும் வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், புடினின் இந்த பயணம் வந்தது, மேற்கு நாடுகளுடனான மோதலில் புடினுக்கு இது ஒரு பெரிய இராஜதந்திர ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.