முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

மகளிர் தினமான நேற்று தமக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் வெளிக்கொணரப்படும் இந்த பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் 7 ஆவது வருடத்தில் இந்த போராட்டம் முன்கொண்டு செல்லப்படுவார்கள் இந்த அடையாள கவனிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமது உரிமைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியவாறு நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் இதில் சுமார் 150 க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்

Related Posts