உக்ரைனின் நிராயுதபாணியான போர்க் கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பதுங்குழியொன்றில் இருந்த உக்ரைன் போர் வீரரை சுட்டுக்கொல்லும் காணொளியும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனது நாட்டை சேர்ந்த போர்க்கைதியை சுட்டுக்கொன்ற ரஸ்ய படையினரை கண்டுபிடிக்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்துள்ளதுடன் கொலைகாரர்களை நாங்கள் கண்டுபிடிப்போம் என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர் கைதி, உக்ரைனை புகழ்ந்து கருத்து கூறியதை அடுத்து, தானியங்கி துப்பாக்கியால் சூடும் காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
12 விநாடிகளைக் கொண்ட காணொளி குறித்து குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்பட்ட திமோஃபி ஷதுரா என்ற உக்ரைன் இராணுவ வீரரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
இதன்கமைய, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இது குறித்த உடனடி விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.