நெடுந்தீவில் இளைஞன் மீது வாள் வெட்டு

knife-bloodநெடுந்தீவு பகுதியில் இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டினை மேற்கொண்டதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமலேஸ்வரன் (வயது 30) என்ற இளைஞன் மீதே இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாள்வெட்டில் படுகாயமடைந்த குறித்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் தற்சமயம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

Related Posts